எகத்தாளம்
போகாதே..அங்கே..
பொறியில் சிக்கி
உயிர் விடாதே..
என்றது .. வாழ்ந்த எலி ..
என் பலம் ..அறிவு..
உனக்குண்டா ..
எட்டிப்போ..என் முன்
நில்லாது ..
என்றுரைத்து..
வடையின் வாசத்தை
நாடி..
தினவெடுத்து ஓடி..
பொறியில் சிக்கியது
வாழ வேண்டிய எலி..!