எனக்கும் காதல்
தினம் தினம் ஓர் யோசனை,
இனி யார் என் காதல் வாசனை?
முதன்முதலில்,
என்னவன் குரல் கேட்டு
மயங்கி திரும்ப,
என்னவன் விழி பார்த்து
என் இதயம் கொடுக்க,
என்னுள் காதல் அடைந்தேன்,
அவனுடன் வானில் பறந்தேன்.
என் இதயம் தேடி இனிய
அலைய தேவையில்லையடா!
என் முன் இருக்கும் உந்தன்
நெஞ்சில் என் இதயம் உள்ளதடா!!
இதற்கு சாட்சியாய் என் உயிரை தருவேன் இது உண்மையடா!!
எங்கோ செல்லும் பயணத்தில்
உன் பின்னே செல்லும் என் இதயம்,
என்னை நீயும் விலக்கி விட்டால்
மரணம் தான் இங்கு நேரும்!!!!♥♥