கபடமும் முறையாக

ஊசிகளின்
முனைகளால்
உன் பெயர் பொறித்தாய்
உதிரத்தில் ஓவியமாய்
வடித்தேன் ..
உயிர் பறிக்க
உறவு கொண்டாயோ ..
இல்லை ...
உன்மத்த
வடிவு கொண்டாயோ..
மன்னித்துப் பழகியதால்..
உன்னை..
மறுதலித்து நகருகிறேன்.
மறுபடியும்..
இன்னொரு உயிர் குடிக்க
முயலாதே..
குறை நிலவே !

எழுதியவர் : கருணா (12-Jan-15, 7:04 pm)
பார்வை : 110

மேலே