யாரென்று தெரியவில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று .. வழக்கம் போலவே நான்
அலுவல் முடித்து வெளியில் வந்து
நீலக் கடலின் மீது வீடு திரும்பும்
பறவைக் கூட்டத்தை பார்த்தபடி
அமர்ந்திருந்தேன்..
ஏன் இந்த குளிர்காலம் மட்டும்
எப்போதும் இருப்பதில்லை இங்கு..
கைகளை பின்னால் ஊன்றி
கால்களை மணலில் நீட்டி
வானத்தை அண்ணாந்து
பார்த்து கொண்டிருந்தேன்..
ஏனோ உன் நினைவு..
இன்றைக்கு வருவதற்கு யார் காரணம்..
யோசித்து கொண்டிருந்தேன்..
ஒ..சிகப்பாக..சற்றே வாளிப்பான
உயரமும் இல்லாமல்..
துடைத்து வைத்தது போல..
ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி
என்னிடம் வந்து ..ஒரு..நிமிடம்.
.நின்று..பின் சென்றாளே!
அவள் கிளறி விட்டதுதான்
இப்போது புகைந்து கொண்டிருக்கிறதா..
அவள் முகம் உன்னுடைய அந்த அழகு
முகம் போலத்தானிருந்தது..
என்ன என்று கேட்பதற்கு முன்
என்னை கடந்து சென்றாள் அவள்..
அது நீயாக இருந்திருக்க கூடாதா.. மீனா!
..
பல ஆண்டுகளுக்கு முன் நீ
கலைத்து விட்டு போன மனதை..
தனித் தனி தீவுகளாகவே
வைத்திருக்கிறேன் ..இன்னும்..
அதில் ..ஒரு தீவில்..நீ..
அழகு குலையாமல்..
இருக்கிறாய்..அப்படியே..!
..
மணலை உதறிக் கொண்டு ..உன்.
நினைவுகளையும் உதறிக் கொண்டு
எழுந்தவனின் பின்னே வந்த குரல்..
என்னை அழைத்தது..
..
..சார்..
..
நீங்கள்..
..
நீ..
ஆமாம்..அதே மீனாதான்..!
..
கண்ணியமான நட்புக்கு..
மையப் புள்ளி
ஒன்று..
அங்கே..
அன்றுதான்
வைக்கப் பட்டது..!