பலா சுளை

பட்டினி கிடந்தவனின் பார்வையில் ஒரு பலா சுளை
சாலை ஓரம் கேட்ப்பாரற்ற இவனை போல
பசியடங்கியவனோ, இல்லை ருசியண்டங்கியவனோ
பாவம் எவனோ புசிக்கட்டும் என மழைகாகிதப்பை முடிச்சுடன்

நாவில் ஊறிய சலம் நாயை மிஞ்ச, நாற்புறமும் இவன் பார்வை விரிய
மஞ்சள் தேவதை ஒருவள் மயங்கி கிடக்கிறாள் இவன் கண்முன்
சட்டை பொத்தான் இல்லா இவனை எவன் பார்ப்பான்
இடுப்பின் கீழ் ஒட்டிக்கிடக்கும் மானம் பார்த்துவிடுமோ

காகம் பார்க்கும் கடைசி திவாலையாய் இவன் பார்க்க
பகட்டான ஒருவன் கடிகார மணிப்பார்க்க
காதலில் நெகிழும் ஜோடிகள் அவரவர் முகம் பார்க்க
எங்கோ ஒலிக்கிறது பேருந்து இதோ வருகின்றேன் என்று

வயிறு சுருங்கி ஆடை அவிழும் இவனை பார்த்து
ஆடையும் ஐயோ என வாய் மூட, துணிந்துவிட்டான் இவன்
கைகால் நாடுங்கி ,அதை மானம் துறந்து எடுக்கயில்
அட ச்சி என்ற சத்தம் அவன் குலையை நடுக்கியது

புசித்தவனுக்கு தெரியாது பாசித்தவனின் வலி
வந்தப்பேருந்தில் எறிச்சென்றது என் மனம் என
நொடிந்து அமர்கயில் அடித்துச் சொன்னது வயிறு
புசித்து தொலை போகட்டும் இத்துடன் என்று

எழுதியவர் : ரவிசங்கர் (13-Jan-15, 2:04 am)
பார்வை : 97

மேலே