நான் ரசித்த சென்னை

நான் ரசித்த சென்னை.... உங்க ஊரு மெட்ராசு நான் தேடி அலஞ்சிருக்கேன் அட்ரசு .....
*சூரியனுதவி இன்றி அறிய உதவியது அதிகமாய் கிழக்கு மேற்கை தாம்பரம்.
*பல்லாவரம் இரயில் நிலையத்தில்
இரண்டு ரூபாய் மட்டுமே கேட்டு வாங்கும் டிப்டாப் பிச்சைக்காரன்.
*பாரிமுனையில் மாமுல் வாங்கும் போலிஸ்காரர். வேடிக்கை பார்க்கிறது உயர் நீதிமன்றம்.
*ஒரு உணவகத்தின் பெயர் 'கொல பசி'
*எக்மோரிலிருந்து வடசென்னை நோக்கி பயணம் செய்கயில் ஒரு துணிக்கடையின் பெயர் 'ஒரு ரூபாய் நோட்டு'.
*சாயங்கால நேரங்களில் காதலர்களின்(கண்டிசன்ஸ் அப்ளை) பூங்காவாய் மாறிவிடுகிறது பழவந்தாங்கல் ரயில் நிலையம்.
*சப்வே மார்கெட்..
*தினமும் பார்த்தாலும் சலிக்காத பறக்கும் விமானங்கள்.
*சூலை மேடு சிக்னலில் அவ்வளவு நெரிசலிலும் முகம் சுழிக்காமல் பணிபுரியும் தொப்பையில்லாத போக்குவரத்து காவலாளி.
*அவ்வப்போது நடக்கின்ற புத்தக கண்காட்சிகள்.
*"இன்னா அங்கியே நின்னுகினு கீற" என்று சொல்லும் சென்னைவாழ் சிறு குழந்தை.. மழலை மொழி எல்லா மொழியிலும் இனிக்கத்தான் செய்கிறது.
*என்னலே மக்கா என்று எனை எனை அழைக்கும் சென்னை
நண்பர்கள்..
*கையிலிருக்கும் ஃபைலை பார்த்து 'இண்டர்வியூக்கா.. ஆல் தி பெஸ்ட்' சொல்லும் யாரென்று தெரியாத பேருந்தில் பக்கத்து இருக்கைக்காரர்.
*ஒரு நாள் முகவரி தேடி ஏதோ ஒரு நிறுவனத்திற்கு பதிலாக ஒரு வீட்டின் கதவை தட்ட வேண்டியதாயிற்று.. 'இவாளுக்கு வேற வேலை இல்லை .. ஏதாவது வித்துட்டு வந்துருவா.. ' என்று என்னை பேசவிடாமல் அலறிய அந்த நல்லவர்.
இன்னும் சென்னையிலும்.. சென்னைவாசிகளிடமும் ரசிக்க கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது..
--கனா காண்பவன்

எழுதியவர் : (13-Jan-15, 2:56 pm)
சேர்த்தது :
பார்வை : 162

சிறந்த கட்டுரைகள்

மேலே