சிறகுகள்

பூ பூத்த பூக்களை
தூர நின்றே ரசிக்கிறது
சிறைகள் தகர்த்து
சிதறிப் பறந்த
என்
அடிமனம் அடைகாத்த
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.....

நினைவுகளின் ரீங்காரம்
பூபாளமாய் இசைகிறது
பூக்களைச் சுற்றியே......

சேர்த்து வைத்த காதலையெல்லாம்
சிக்கனமாய் சொல்லிவிட்டேன்
கைகொடுத்த வார்த்தைகளை
கவிதையாய் கரம் பிடித்து ........

பூ
ரசித்தது என்
பட்டாம்பூச்சிகளை ....
அழகென கைமாறியது
மலர்களிடத்தில்

மெல்ல
வண்ணங்கள் கரைந்தது
சிறகுகள் சிதைந்தது
என் காதல் அரங்கேறியது
கவிதையாய்............

என் பட்டாம்பூச்சிகள்
மீண்டும் பறக்கிறது
பூவை சுற்றியே ................

எழுதியவர் : பார்த்தீபன் (13-Jan-15, 6:28 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : siragukal
பார்வை : 108

மேலே