காதல் தோல்வியின் ஆழம்

நதி மீது மீன் வைத்திருப்பதும் காதல் தான்
நிஜம் மீது நிழல் வைத்திருப்பதும் காதல் தான்
கண் மீது கண்ணீர் வைத்திருப்பதும் காதல் தான்
உடல் மீது உயிர் வைத்திருப்பதும் காதல் தான்

நதி மீது மீன் காதல் கொல்வதும்
நிஜம் மீது நிழல் காதல் கொல்வதும்
கண் மீது கண்ணீர் காதல் கொல்வதும்
உடல் மீது உயிர் காதல் கொல்வதும்
உண்மையான காதல் தானே

பிறகு ஏன் ஒவ்வொரு காதலும்
காலத்தால் தனிமை அடைகிறதோ?

எழுதியவர் : நா ராஜராஜன் (13-Jan-15, 6:50 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 95

மேலே