நாளையத் தமிழும் தமிழரும் பொங்கல் போட்டிக் கவிதை -2015

நாளையத் தமிழும் தமிழரும் ! பொங்கல் போட்டிக் கவிதை -2015

நாளைப் பொழுது
நலமாய் விடியட்டும்!
காளைகள் மோதக் களிக்கட்டும் !
- தோளைக்
குலுக்கும் தமிழன்
குழந்தை, தமிழை
விலக்கி வளரட்டு மே!

விடிக பொழுதே! விடிக!
தமிழர்
குடியுள் தமிழைக் கொளுத்திப்
- படியாத
காளை , விலங்கினத்தில்
காணாமற் போக,
ஆளாய் எமக்குள் அமர்ந்து!

கொளுத்து தமிழை;
குடிப்பெருமை காளை
வளர்த்தே அடக்க வளரும்!
- முளைத்தே
பிறமொழிப் பாத்திகளில்
பிள்ளைகள் வாழக்
குறைமொழி ஏன்,நமக் கு!
===
இந்த படைப்பு என்னால் படைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துறேன்.

எசேக்கியல் காளியப்பன்

வயது – 71
(வயது எதற்கு? முதியோர் சலுகை ஒன்றும் அறிவிக்கப்படவில்லையே!)

உறைவிடம் -
மனை எண்:7, சிறீ பார்சுவ நாத் அவென்யூ
மாடம்பாக்கம்,
சென்னை -600126

தொலைபேசி இலக்கம். 9840115227

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (13-Jan-15, 8:53 pm)
பார்வை : 68

மேலே