இப்படி காதல் செய்வோம் “பொங்கல் கவிதை போட்டி 2015”

அழகை புறந்தள்ளி அன்பை மட்டும்
மலரச்செய்து காதல் செய்வோம்...
பொது இடங்களில் புத்தம் புது பார்வையால்
முத்தமிட்டு காதல் செய்வோம்...
நான் உனக்கு தந்தையாய்,
நீ எனக்கு தாயாய்..
செல்லக் கண்டிப்புடன் காதல் செய்வோம்...
உன் கல்வி நம் சாதியாய்
என் அனுபவம் நம் மதமாய்...
உள்ளப் புரிதலுடன் காதல் செய்வோம்...
கிளைகளில் அமரும் சின்னஞ்சிறு குருவிகளாய்
வெண் மணற்பரப்பில் மரணித்த, அலையின்
கண்ணீரில் அமர்ந்து அடக்கமாய் பேசி காதல் செய்வோம்...
காதலர் தினத்தில் கல்வி இல்லா ஓர் குழந்தைக்கு
கல்வி தந்து காதல் செய்வோம்...
பிறந்தநாள் பரிசுகளாய் பசித்த பத்து வயிறுகளுக்கு
அன்னமிட்டு பசி தீர்த்து காதல் செய்வோம்...
சீர் கெட்ட இச்சமுதாயத்தை சீக்கிரமாய்
சீர் செய்ய சின்னக்குழந்தைகளாய் காதல் செய்வோம்...


இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
தெற்கு தெரு,மேலாயக்குடி(அஞ்சல்)
பரமக்குடி(தாலுகா),இராமநாதபுரம்(மாவட்டம்)

எழுதியவர் : க.ஹேமநாதன் (14-Jan-15, 1:00 am)
பார்வை : 86

மேலே