சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015
சாக்கடைப் புழுவாய் நீ தரித்திருந்தால்
சாதி உனக்கு அவசியம் தேவை
சாதிக்கு சங்கடம் இல்லாமலே
மானம் கெட்டு
மதத்தோடு வாழ்ந்து மனிதம் இழந்து
மண்ணோடு மடிவது வாழ்க்கையா?
சாதிக்கவும் போதிக்கவும் சாதியும் வேண்டாம்
மண்ணில் வாழ மதமும் வேண்டாம்
சாதிப்பதிலும் ஓர் சாதனை செய்யலாம் வா...
சாதி உன்னை சூழ்ந்தால்
பாம்பின் சட்டை போல பட்டை உரித்துப்போடு!
மதத்தை மண்ணிலிட்டு
மடியும் வரை மரணம் கொடு!
சாதி மத சமுதாயத்தை கூறு போடு!
சலித்தாலும் கிடைக்காதவாறு சிதறச்செய்!
சாதனைகள் செய்திட சாதியை சங்கடப்படுத்து
மனிதனாய் வாழ்ந்திட மதத்தினை மானப்பங்கப்படுத்து
சாதி ஒழித்து மதம் அழித்து
மனித வாழ்வின் கனவை
சாதிக்கலாம் சங்கடங்கள் இல்லாமலே
அகிலத்தில் அன்னை ஒருத்தியே தெய்வம்
அவளையே ஆராதி அனுதினமும் சாதிமதம் கடந்து
**********************************************************************************************************
இந்த கவிதைக்கு நானே முழு உரிமையாளரென்று உறுதி அளிக்கிறேன்.
பெயர்: கோ நாடிமுத்து
வயது: 30
வதிவிடம்: 143 துரௌபதி அம்மன் கோவில் தெரு
பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம்,
614601
நாடு: இந்தியா(தமிழ்நாடு).
அழைப்பிலக்கம்: 98 652 72 302.