சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதைப்போட்டி- 2015
சாக்கடையை வாரி
சாப்பிட நினைப்பாயா?
கூவத்து நீரில்
குளிக்க நினைப்பாயா?
பின் –
சாதியை எதற்கு
சாப்பிட்டு வளர்கிறாய்?
மதத்தில் எதற்கு
தினம் குளித்தெழுகிறாய்?
சாதி மதமென்பது நச்சு செடி
அதற்கெதற்கு
தினம் நீ தண்ணீர் ஊற்றுகிறாய்?
போ...
அதன் வேரில் வெந்நீர் ஊற்று
எந்த சாதிக்கு பிறந்தவன் ?
என்று பேசுவதை நிறுத்து
என்ன சாதிக்க பிறந்தவன்?
என்ற கேள்வியால்
உன் சிந்தையை திருத்து
சாதி மதங்களை அழித்துவிடு
இல்லையேல் ...
அது உன்னை அழித்துவிடும்
ஆம்.
மதம் – சாதி துறக்கப்பார்
மனிதனாய் மட்டும் இருக்கப்பார்
------------------------------------------------------
இது என் சொந்த படைப்பு என்று உறுதிகூறுகிறேன்
பெயர் – புதுவைப்பிரபா
வயது – 41
ஊர் – புதுச்சேரி
நாடு - இந்தியா
அழைப்பிலக்கம் – 9443214654