தைபொங்கல் நல்வாழ்த்துக்கள் -கயல்விழி

தை திங்கள் முதல் நாள் இன்று
தலை குளித்து நீறுட்டு

பட்டாடை தான் உடுத்தி
பக்தியோடு அடுப்பு கூட்டி

மண் பானை பொங்கல் வைத்து
பொங்கி வரும் வேளையிலே
பொங்கலோ பொங்கல் கோஷமிட்டு

ஏர்பிடிக்கும் உழவர் எம்மை
ஏற்றம் பெற வைத்தவனை
இதயத்தில் தீபம் ஏற்றி
நன்றியோடு படையல் வைத்தோம் ....

உதயத்திலே உள்ளம் குளிர்ந்த
ஆதவனும்
நல்லாசி தந்தான் புன்சிரிப்பிலே ...!!!

இன்று தை திருநாள் கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் என் இதயம் கனிந்த தைபொங்கல் நல்வாழ்த்துக்கள் ....

என்றென்றும் அன்புடன் "கயல்"

எழுதியவர் : கயல்விழி (15-Jan-15, 9:11 am)
பார்வை : 286

மேலே