கிராமத்துப் பொங்கல்

போகிப்பொழுது போயிருச்சு;
பொங்கலுக்கு புத்தாட போட,
சூரிய மேக்க ஓடிருச்சு.
ஒரு வாரத்துல நம்ம கிராமம்,
கூட்டம் நெறயா பாத்துருச்சு;
சின்னச்சின்னதா புதுக்கடைக,
நெறயாவே பொறந்துருச்சு;
ரத்தத்துல கலந்ந மஞ்சுவிரட்டுல
கலக்க
மகன் மாடசாமி தயாராயிருச்சு,
சென்னைக்கு கட்டிக்கொடுத்த
எம்மக
வருசம்போல புருனோட வீட்டுக்கு
வந்திருச்சு;
திருவிழாவ செறப்பா நடத்த,
தலைவர்கள் கூட்டம் கூடிருச்சு;
கடவுளால இந்த வருசம்,
கரும்பு நல்ல வெல பாத்துருச்சு;
பண்டிக மங்கலமா இருக்கதா,
நெறயா மஞ்சள் தோண்டி
எடுத்தாச்சு;
பொங்கலுக்கு விறகு சாயாங்காலந்தான் வெட்டியாச்சு;
விடிஞ்சா பொங்கல்,
நேரமா எந்திரிக்கோணும்;
குடும்பத்தோட கோவிலில
சாமிய நல்லா கும்பிடணோம்;
எங்கிருந்துதா சந்தோசம் வருதோ
எல்லா பொங்கலும் பொலிவாயிருச்சே !!
இதுபோல பொங்கல்
தெனமும் வந்தா
வாழ்க்க நிம்மதியாயிடுமே...!!!

எழுதியவர் : ந.Fஐழ் Ahamed (15-Jan-15, 9:08 am)
சேர்த்தது : ஃபைஸ் அகமது
பார்வை : 134

மேலே