சாதி ஒழி மதம் அழி சாதி

சாதி ஒழி ! மதம் அழி ! சாதி
(பொங்கல் கவிதைப்போட்டி 2015)
மலையில் தோன்றி
கடலில் கலக்கும்
நதிக்கு இல்லை சாதி!

தொடுவானம் தொட்டு பறக்கும்
குருவிக்கும் குயிலுக்கும்
இல்லை சாதி!

பல வண்ணங்களில் பூத்தாலும்
பூக்களில் இல்லை மதம்!

இவைகளை பார்க்கிலும்
நீ என்ன சாதித்துவிட்டாய்
சாதியை கொண்டாட?
மதத்தை நினைக்க தெரிந்த - உனக்கு
மனிதம் மறந்தது ஏன் மனிதா??


சாதியால் உடைந்த உலகம்
பீதியால் நிறைந்திருக்கிறது.
மதம் என்ற பெயரில் - மக்களை
வதம் செய்யும் கூட்டம்(கூவம்)
நம்மை அழுக்காக்கிவிட்டது

கலவரம் கூட
கலாச்சாரமாய் மாறியது
வன்முறை கூட
வானவேடிக்கையாய் மாறியது.
வேங்கையாய் புறப்படு
சாதி ஒழி! மதம் அழி!!


க.சங்கர் (21)
5/157, கனகவேல் நகர்,
ஆத்திக்குளம், மதுரை-625007.
9791647127

எழுதியவர் : க. சங்கர் (15-Jan-15, 9:01 am)
சேர்த்தது : Shankar Paul
பார்வை : 193

மேலே