ரத்தத்தின் ரத்தமே…

அன்றுநம்பொன் மனச்செம்மல் மருத்துவ மனையில்
அனைவருமே துடித்தபடி அவரவர்கள் மனையில்
என்னுயிரை தருகின்றேன் மன்னனுயிர் வாழ
இறைவா!நீ ஆணையிடு என்றாணை யிட்டார்
இன்னொருவர் உதிரத்தால் மன்னனுயிர் பிழைத்தார்
வள்ளலுக்கே வள்ளலாய் யார்? சக உதிரம் கொடுத்தார்
இன்னுயிர்தான் உள்ளவரை இதனைஅவர் நினைத்தே
(என்) ரத்தத்தின் ரத்தமே என்றுதானே விளித்தார்!

எழுதியவர் : சு.ஐயப்பன் (15-Jan-15, 10:17 am)
பார்வை : 67

மேலே