இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதை போட்டி 2015”
அரும்பிய காதலுக்கு முகவரி தருவாயோ,
உதிர்த்த என் கனவுக்கு புகலிடம் தருவாயோ,
என் நிழலில் நீ நடைபோட கை சேர்ப்பாயோ,
ஆசை வார்த்தைகள் கூறப்போவதில்லை..!
மோக ஆசையும் துளியும் இல்லை..!
கைப்பேசியின் சிணுங்களும் தேவையில்லை - ஆதலால்
"ம்...உம்" என்ற நிண்ட வார்த்தைக்கு இடமும் இல்லை.
இடம் ஒன்று தேடி மறைவை அலசும், கண் பார்வை இங்குயில்லை...!
ஊர் ஏற்றம் காணும் உலாவும் வேண்டாம்..!
நாள் ஒன்றுக்கு இரு முறை சந்திப்பு
பார்க்கும் பொழுதில் கண் பார்வை
பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்
அர்த்தங்களை மொழிபெயர்க்க
உன் உதட்ரோ புன்னகை...!
உன் மனதில் என் எண்ணம்
என் மனதில் உன் வண்ணம்
என்று மாலை மாற்றமால் ஒர் வாழ்வு..!
காதலை காதலாக காதலித்து
நாம் கரம் சேர்ப்போம்.....வா என் வஞ்சியே...
இந்த நவீன யுகத்தில் இப்படியும் காதலிக்கலாம்
என்ற சொல்லுக்கும்...பொருளுக்கும்
உதாரணமாவோம்.♥
இது எனது சொந்த படைப்பு இதற்கு நானே முழு உரிமை ஏற்கிறேன்.
பெயர் : தங்கமாரியப்பன்
வயது : 28
ஊர் : மதுரை, தமிழ்நாடு
நாடு : இந்தியா
அழைப்பிலக்கம் : +919443699080;+919008554996