நிஜமாய் என் மனதில் நீ
என்னுள் நிழலாய் வந்தாய் நீ
உன்னுள் நிஜமாய் வந்தேன் நான்
நிழலும் நிஜமும் நிம்மதி பெற
காதலித்து விடு கண்ணே நீ.
கனவு கன்னியே நீ தானடி
கற்பனை வளமும் நீ தானடி
கவிதையின் சொல்லும் நீ தானடி
கற்கண்டின் சுவையும் நீ தானடி..
காத்திருக்க முடியாது என்னால் இனி
காதலித்து விடு கவிதைகளில் நீ
கண்ணே மணியே முத்தே நீ
நிறைந்து விட்டாய் என் மனதில் நீ...