இப்படி நாம் காதலிப்போம் -பொங்கல் கவிதைபோட்டி 2015

அந்த இரவு விடுதியின் முகப்பைக் கிழித்து வெளியேறும் துர்பாக்கியவான்களின்­ அகோர பிரசன்னங்கள்
மென்மேலும் உடலுக்குள் பீதியைத் தள்ளுகிறது

ஒரு நாகரீக யுவதியின் முலைக்காம்பைக் கிழித்து வெளியேறும்
நாகரீக உள்ளாடையில் ஒழுகும் கலாச்சார வன்மத்தை
விழிகளால் நக்கியபடி
சாமான்யனாகிக் கொண்டிருந்தது
அதி மேதாவிக் கூட்டமொன்று..

வன்புணர்வுகள் வழியாய் கூவிக் கூவி
மனிதம் விற்கும் மாந்தர்கள் அவசர கதியில்
தங்கள் காமத்தை மெருகேற்றிக் கொள்ள
அணைத்துறங்கும் துணையனாய் தங்கள் வெளிச்சங்களை
குருட்டடித்துக் கொண்டது அந்த இரவு விடுதி

இசையின் அகோர விசையாக்கங்களில்
பிண்டங்கள் அதிரும் நவநாகரீக மேடைகளிலிருந்து
தங்கள் அதிகாரங்களைக் களைந்தபடி
உத்தமர்கள் தங்கள் உத்தமங்களை உரக்கக் கூறிக்கொண்டே
ஒரு விடுமுறை தினத்தில் வெளியேறலாயினர்.

அந்தக் குருட்டுக் காதல்களின்
பிம்பங்களின் வாயிலாய்
இப்படி நாம் காதலிப்போமென நாகரீக யுவதியொருத்தி
தன் துணையை பின்னிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்

இக்கவிதை என்னால் இப்போட்டிக்காகவே எழுதப்பட்டது என உறுதி அளிக்கின்றேன்
எஸ்.எம்.ஜுனைத்ஹஸனி
மதுரை
கைப்பேசி. 8643814718

எழுதியவர் : எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி (15-Jan-15, 1:20 pm)
பார்வை : 64

மேலே