நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதைப் போட்டி 2015”
அங்கோ அழிகிறது என் இனம் !
இங்கோ சாகிறது என் தமிழ் !
ஓ! இயற்கையே, எல்லாமும்
உன்னிடமிருந்துதானே உருவானது
பிறகு ஏன் தானோ இந்த பாரபட்சம்,
உன்னில் தோன்றி, உன்னில் மறையும்
இந்த ஊன் பிண்டங்கள்
ஏனோ அறிய மறுக்கின்றனர்
எல்லாமும் உன் காலடிதனில் என்பதனை.
ஓ! வெறியாளனே, உன் கொட்டம் ஒடுங்கும்- பாரடா
இப்பார் வெல்லும் நாளைய என் தமிழனை.
செந்தமிழ் என்றதும் தேன் தமிழாய்
தித்திக்கும் என் தீந்தமிழே !
நின்னை வெல்மொழியொன்று
இவ்வகிலம் தனில் உண்டோ !
உன்னில் கலந்து உன் சிறப்பைக் கெடுக்கும்
பிற மொழி கொன்று- நாளை
உன் தூய்மை போற்றட்டும் உயர்தனிச்செம்மொழியாக.
ஓ! இயற்கடவுளே ஓர் நியதி வழங்குவாயா !
“நாளை என் தமிழின் நாளை,
நாளை என் தமிழரின் நாளை”.
பெயர்: கார்த்திகேயன். ப
வயது: 25
வசிவிடம்: எலியத்தூர், சின்னசேலம்-606201.
நாடு: இந்தியா
அழைப்பிலக்கம்: 9994652091