நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”
நாளை..தரணியெங்கும் மறுபடியும் ..
ஒரு உலகப் போர் மூளும்..ஆயுதப்போர் அல்ல..அது..!
தமிழ் மொழிதனை
இன்றைய தலைமுறை சுவைத்தறிந்து
நாளைய உலகிற்கு நகர்த்தி செல்வார் நயமுடனே!
அன்று..நாடுகளெல்லாம் தமிழினையே மோகிக்கும்..
தமிழருமை தனை உணர்ந்து..தம் நாட்டு பிள்ளைகளுக்கு
போட்டி போட்டு தமிழ் சொல்லிக் கொடுக்கும்..
அப்படியும் ஓர் போர் மூளும்..
யார் தமிழை அதிகமாய் அறிந்தவரென்று!
..
மரபுகளுக்கு மறுவாழ்வு தந்து ..மனிதத்தில் ஓங்கி நின்று
உலகில் தமிழனும் நின்றிடுவான்..
இவனைப் போல் உலகில் எவனுமில்லை என்ற வண்ணம்..
நாடுகள் எல்லாம் அவர் நாட்டில் ஒரு பகுதியினை
தாரை வார்க்கும்..ஆங்குள்ள தமிழர் தன்னாட்சி செய்து கொள்ள ..!
நாளைய தமிழரிடம் ..தனித்தனி மதங்கள் மறைந்து போகும்..
ஒரு மதமே இருக்கும்..தமிழன்னையே அதன் கடவுள்! திருக்குறளே வேதம்!
ஒரு சாதி மட்டிலுமே இருக்கும்..அது தமிழ் சாதி என்று உரைக்கப்படும்..
மற்றதெல்லாம் அழிந்திருக்கும் !..அன்று..!
தமிழர் என்பார்..அறம் மிகுந்து..மது மறந்து....
விஞ்ஞானம் கடந்து..எங்கு சென்றாலும் ஏற்றம் பெற்று
இலவசங்கள் இறக்க செய்து..உழைப்பையே உண்மையாக்கி
சூழ்ச்சிகள் ஏதுமின்றி வள்ளுவன் நெறியில் வாழும்..கர்ம வீரர்களாய் திகழ்வார்..!
----------------------------------------------------------------------------------------------------
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி :
ச.கருணாநிதி, வயது: 53 ,
16,சுந்தர மேஸ்திரி வீதி, குயவர்பாளையம்,புதுச்சேரி
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 94433 03407