நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”
எம் வீட்டுக்குழந்தைகள்
அப்பா என்ற சொல்லை ஆச்சரியமாகவும்,
அம்மா என்ற சொல்லை அதிசயமாகவும் -கேட்கும்.
பள்ளிசெல்ல ஆரம்பிக்கும் எம்வீட்டு கன்றுகள்...
முதன் முதலில் "அ" வைத் தவிர்க்கும் போது,
தமிழன் கண் நீர்க்குளமாயிருக்கும்..!
படிப்புக்கும், வேலைக்கும் தமிழன் மேலைநாடுக்கு ஏற்றுமதி...!
பதப்படுத்தப்பட்ட அரிசி மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி....
மதி கேட்டு விதியை குறை குறி வீதியில் - நிற்போம்
அப்போதும் நூனி நாக்கில் பிறமொழி தவிழும்..!
வகைவகையாக உறவுகள் இருக்க - அனைத்தையும்
இரு சொல்லில் அழைக்கும் நவீன நாகரீகம்...!
நாளைய சமுதாயத்திடம் இருந்து
தமிழனின் மருத்துவம்,வீரம்,பரிவு,நீதி, நேசம்,பாசம்,விருந்தோம்பல்,காதல்
அனைத்தையும் மெல்ல மறக்கடிக்கும் - நவீனமும் நாகரிகமும்
மீதம் உள்ளதும் அருங்காட்சியகப்பொருளாக இருக்கும்.
தமிழனின் பண்பாடு சீர்குலைந்து கம்பு ஊன்றி நிற்கும்
தமிழன் தமிழனாகவும் இருக்க முடியமால், தமிழை வளர்க்கவும் முடியமால்
சிலம்பத்தின் வீரத்தையும் - பரம்பரியத்தை விட்டுக்கொடுக்க மனமும் இல்லமால்
சவமாய் வாழ்ந்து கொண்டு இருப்பான்..!
தமிழக்கு அழிவு என்று ஏதும் இல்லை
தமிழராய் நாம் தமிழை மறப்பது நம்
அடையாளத்திற்கு அழிவு...!
இது எனது சொந்த படைப்பு இதற்கு நானே முழு உரிமை ஏற்கிறேன்.
பெயர் : தங்கமாரியப்பன்
வயது : 28
ஊர் : மதுரை, தமிழ்நாடு
நாடு : இந்தியா
அழைப்பிலக்கம் : +919443699080;+919008554996