காட்சி பொருளா செந்தமிழ்
கல்வெட்டின் காட்சி பொருள்
காலம் வென்ற செந்தமிழ்!
கற்றிட தமிழோரின்றி
காத்திருக்கும் நாளைய தமிழ் !
புறம் ஒன்று பேசும் தமிழோர்
அகத்துக்குள் ஆங்கில வேதம்
கற்கின்ற பிள்ளை வளரனும் - நல்லாய்
அமுதூட்டிய தாய் ஆகணும் கல்லாய் !!
இப்படி தானிருக்கும் நாளைய சேதி !
இப்பொழுதே மீட்டனும் பாதி
முப்பொழுதும் ஏற்றணும் ஜோதி
வெட்டிச் சாய்திடவேண்டும் சதி !
அனுதினமும் எண்ணமதால் துதி !
அப்புறமே ஒளிவீசும் முழுமதி !
நற்றமிழ் உலவும் வீதி !
நறுமணம் வீசும் விபூதி !