மறக்காத உன் நினைவுகள் 555

என்னவளே...

கலையாத சில முடிகளை நீ
காதோரம் ஒதுக்கும் ஒத்திகை...

உனக்கு பிடித்த வார்த்தைகளை
நான் சொல்லும் போது...

கேட்டும் கேட்காதவள் போல்
திரும்ப கேட்கும் வினாடிகள்...

நான் எதையோ கேட்க
நீ எதையோ சிந்திக்க...

மௌனம் கலைத்து நீ
சொல்லும் பதில்...

நான் எது சொன்னாலும்
உதடுகளில் பல பவானைகள்
செய்வாயே அந்த உற்சாகம்...

நம் நான்கு கண்களும் இரண்டர
கலந்த போது ஏற்பட்ட மலர்ச்சி...

உன் மடியில் நான் அயர்ந்து
தூங்கிய சந்தோசம்...

என் தலை வருடியபடியே
நீ கண்ணடித்த அந்த நிமிடம்...

இன்னும் என் கண்ணுக்குள்
ஓவியமாக நினைவுகள்...

உன் மீது நான் வைத்த அன்பு
இன்னும் மாறவில்லை...

என் மீது நீ வைத்த
பாசம் மட்டும் எப்படி மாறியது...

இன்று மணவறையில் நீ...

உன்னை மறக்க
முடியாமல் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Jan-15, 4:59 pm)
பார்வை : 1254

மேலே