நாம் இப்படி காதலிப்போம்- பொங்கல் கவிதைப் போட்டி 2015
காதலைச் சொல்லி ஏற்காதபோது...
தவறான சிந்தனைகளுக்கு இடமளிக்காது முன்னேறி செல்வோம்...
பிடித்திருப்பின் காதலை ஏற்று
கல்யாண வாழ்க்கைக்கு
நம்மை தகுதிபடுத்தி கொள்வோம்...
நாம் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளும் பயணத்தில்
புரிந்து உடனிருக்கும் உறவுகளை உடைத்தெறியாதிருப்போம்...
கோபமும், சண்டையும்
மனிதனின் இயல்பு...
இருந்தாலும் அதன் ஆயுள்
ஒரு நாளுக்குமேல் நீட்டிடாதிருப்போம்...
பிள்ளைகளின் பெயரின் முன்னும்
இணைந்தே அடையாளமாகுவோம்...
நம் பிள்ளைகள் எதிர்பாலையோ...
எதிர்காலத்தையோ
நம்மால் வெறுக்காதபடி வாழ்ந்திருப்போம்...
நாம் இப்படி காதலிப்போம்...!!