இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதைப்போட்டி 2015”

அலம்பும் அகில்க்கைகள்
தழுவ படிக்கரை
ஆனந்தக் குடமும் மயங்கி
நழுவி இசைகிறது !!!! இசைக்கிறது !!!!
இணைந்த தண்ணீரில்
நனைந்து தானும் காதலென்று மிதப்பில்....

கூத்தாடியாய் தினம்
ஆத்தாடி உன் பின்
காத்தாடியாய்ச் சுற்றும்
குறுந்தாடிக் கவி என் சொல்
கேட்காத இவைகளை
பார்க்காத நீயும்.....

எப்படியும் உன்
சொப்பன மனதினைக்
கற்பனைக் கரைசலால் கரைத்திடுவேன்
மற்றவன் மனைவியை தொட்டது
தப்பென அவை நாண !!!!

தழுவலும் நழுவலும்
தேவையில்லை மெய்க்காதலுணர்த்த...

கல்லையும் கரைத்திடும் கவி கொண்டு
அப் படி நீ நின்ற நிலை பாடி
தினம் மனதால்
இப்படி நாம் காதலிப்போம் !.........

எழுதியவர் : நஞ்சப்பன் (15-Jan-15, 8:44 pm)
பார்வை : 113

மேலே