காதலில் கசிந்த அன்புக்குருதி

துளி பொழுதில்
தூவுகின்ற
தூரலே
குளிர் கனத்தை
கூட்டிவிட்ட
சாரலே
மஞ்சள் தேகத்தை
மறைக்க துடிக்கும்
மஞ்சளே
கூந்தல் அசைவிலே
காற்றனுப்பும்
மின்னஞ்சலே........

கற்றை புருவத்திடை
குங்குமகாடு
அதில் நான்
தொலைந்தால் போதுமடி
அதுதான்
வீடுபேறு .......

உன்
ஏகப்பெருமூச்சில்
எனது எண்ணமோ
மாலத் துடிக்குதடி
மாதர் பூமயிலே
என்னுயிரோ
காலம் கடந்து
இவ்வுலகில் உன்னோடு
வாழத் துடிக்குதடி.......

சித்திர சிநேகம்
உண்டு -அது
கற்பனையில்
உருவாகி
தூக்கம்
கலைத்ததுண்டு....
கண்ணில்
காணும் அத்தனையும்
கற்பனை வீணை
இசைத்த கச்சேரியோ
என்ற சந்தேகம்
எழுவதுண்டு ......

பொன்மணியே
என் முத்துசிற்பமே
சுண்டுவிரல் கோர்த்து
சுற்றிவருவோம்
சௌந்தரிய
ஜுவாலை நம் மத்தியிலே .....
செயற்கை காதலின்
செரிமானம் செத்துதொலையட்டும் .....

புதுக்காதல் படைப்போம்
புதியவளே .....
புதுயுகம் அதிலிருந்து
பூரணத்துவத்தை
ஸ்பரிசிக்கும் .....
புத்திக்கும் -இதயத்துக்கும்
பாயட்டும் தனிசக்தி ....
உனக்கும் எனக்கும் மத்தியில்
மின்னியல்
மாற்றத்தை
பரிமாறிகொள்வோம்.....

பெண்ணே வா
நாம் நம்
இதய சப்தத்தின் ஓசையை
இப்பிரபஞ்ச
ஓசையோடு
இணைப்போம் ....
இன்ப தீயை
இருதயத்திலிருந்து
இருந்து கொட்டும்
அன்புக்குருதியால்
அணைப்போம் ..........


***************************************************

என்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (15-Jan-15, 8:48 pm)
பார்வை : 112

மேலே