சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதை போட்டி 2015

சாதி
சமுதாய வியாதி
பள்ளி படிப்பில் தாக்குவதில்லை
துள்ளி விளையாடிபோதும் தொற்றுவதில்லை
பருவ வயதிலும் நெருங்குவதில்லை – பின்
உருவமின்றி உள்ளே சென்றதெப்படி
பக்குவமில்லா பழைமைவாதிகளினாலும்
பிரித்துவைக்கும் அரசியல்வாதிகளினாலும்.

அரசாங்கமே
விண்ணப்பத்தில் சாதியை வெட்டியெறி
மறக்க நினைப்பவர்களையும்
நினைக்க தூண்டுகிறது

மதம்சாதி கொண்டு.
மனங்களை பிரிப்பவர்களை
பைத்தியகாரர்களாக பட்டியலிட்டு
மனநல மையங்களுக்கு மாற்று

சாதி நாதியற்று போக
மதம் மனம் மாற
தூய காதலையும்
துவசம் செய்யும் சாதியை ஒழிக்க
மனித நேயத்தையும்
மறக்க செய்யும் மதத்தை அழிக்க
என்னால் முடியும் என்போர் எல்லாம்
தன்னால் மாறினால் அப்பொன்னாள் மலரும்

எழுதியவர் : சுகுமார் (15-Jan-15, 9:02 pm)
பார்வை : 56

மேலே