இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைப் போட்டி 2015

கைபேசியில் பொய் பேசிடும்
காதல் வேண்டாம் ...
கண்பேசியில் மெய் பேசிடும்
காதல் கொள்வோம் ...!
கணிப்பொறியில் அகம் பற்றும்
விஞ்ஞான ஆபத்தாக
ஒரு காதல் வேண்டாம் ...
உள்ளப்பொறியில் அகம் பற்றும்
மெய்ஞான விபத்தாக
திரு.காதல் கொள்வோம் ...!
கண்ட இடங்களிலெல்லாம்
கண்காட்சி ஆகிடும்
அபச்சாரக் காதல் வேண்டாம் ...
கலாச்சாரத்தைக்
கண்போல் காக்கும்
ஆச்சாரக்காதல் கொள்வோம் ...!
சேதாரம் செய்யாமல்
மரபுக்காதலைப் புதுப்பிப்போம் !
உறவைப் புண்படுத்தாமல்
உலகைப் பண்படுத்தும்
உன்னதக் காதல் கொள்வோம் ...!
இப்படி நாம் காதலிப்போம் ...
காதலுக்கோர் அவதாரமாய்
நாம் இருப்போம் ...!
இந்தக் கவிதையைப் படைத்த கவிஞன் நான் என்பதை இங்கு உறுதி அளிக்கிறேன் .
பெயர் - த.மலைமன்னன்
வயது - 24
முகவரி - 21.G முருகன் ஆரம்ப பாடசாலைத் தெரு ,
புனல்வேலி (626111)
இராஜபாளையம் (வட்டம் )
விருதுநகர் (மாவட்டம் )
தமிழ்நாடு (மாநிலம் )
இந்தியா .
அலைப்பிலக்கம் - 9629951700
9677364647