நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015
விலங்காய் விளைந்ததை மற்றவர் தின்றிருக்க
விதையாய் விழுந்து விருட்சமாய்
வளர்ந்தவன் தமிழன்
திசையறியாது காட்டினில் மற்றவர் திரிந்திருக்க
திசை காட்டியாய் உலகிற்கு
திருக்குறள் தந்தவன் தமிழன்
வலுவால் தேசங்களை அடக்கியவன் முன்
மதியால் உலகை வசப்படுத்தியவன் தமிழன்
நாசா என்றாலும் இஸ்ரோ என்றாலும்
எங்கும் முன்னிலை எங்கள் தமிழன்
சாதிஎனும் சகதியில் புதைந்து விடாமல்
புகையும் மதுவும் புறந்தள்ளி
புறப்பட்டு தமிழா நீ இன்று
மடு என நினைத்திடும் பகை முன்னே
மலை என வாழ்ந்திடு நீ என்றும்
......... இசக்கிராஜ்
இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்
முகவரி : எ ஜி 1, அனிருத், வசுதார வளாகம், ஆண்டாள்புரம்
மதுரை தமிழ்நாடு
94423 62501