உழவனின் காத்திருப்பு - உதயா

மேகம் கருக்குதடி
மேல்வானம் ஜொலிக்குதடி
வருணனின் வருகைகாக
வனங்களும் காத்திருக்குதடி .......

மெத்தலம் ஒலிக்குதடி
ஊரெங்கும் முழங்குதடி
வருகையை அறிந்தப்பின்னே
உழவன் மனம் நெகிழுதடி

குருவி கூட்டமிட்டு
கும்பலாக இனம்சேர்ந்து
களத்தினில் கலப்பாடும்
கம்புகளை கடத்துதடி.....

கொக்குகள் பறந்து சென்று
ஆற்றருகே இடம்பெயருதடி
உணவின் வருகைக்காக
உறக்கமின்றியே தவிக்குதடி .

காடு மேடெல்லாம்
பஞ்சமான மாசு நீங்குதடி
பசுமை மல்லியாக
பாரெங்கும் மலருதடி ...

செழிமை செம்மலாக
செந்நிற உலடலோடு
வருவித்த சிலகனத்தில்
நீராக மண்மேல் ஓடுதடி ..

கண்கள் ஊற்றாக
விவசாயிக்கு மாறுதடி
மனமின்ப காரணத்தால்
ஆனந்தம் கண்ணீர் கொள்ளுதடி

இன்பத்தை கண்ணில் கண்டு
இனியொருமுறை பிறப்பெடுக்க - வருணன்
பரிதியின் பார்வைப்பட்டு
பறந்து சென்றான் தாய் விட்டருகே..

வழி எங்கும் கண்ணோடும்
வன்மமில்லா அன்போடும்
வருணனின் வருகைக்காக
வானத்தையே தான் மனம் பாக்குதாடி ...

எழுதியவர் : udayakumar (16-Jan-15, 11:41 am)
பார்வை : 65

மேலே