என்னவள் என்ன அவள்

உன்னோடு என்றும் நான் இருப்பேன் என்ற என்னவளே
உன்னை தெரியாதும் என்றாள்.!




அன்று என் கண்களை பார்த்து
காதலை சொன்னாள்
இன்றும் சொன்னாள்
நி வேண்டாம் என்று..!



என்னை விட்டு பிரிந்து விடாதே
என்று பற்றிய அதே கைகள் தான்
நீ வேண்டாம் என
தள்ளியது இன்று..!



அன்று என் பேச்சை கவிதை என்று கேட்டவள்
இன்று ஒரு நொடி கூட செவி சாய்க்கவில்லை என்னவள்..!




யார் பார்தாலும் சரி
உன்னுடன் இருக்க வேண்டும் என்றவள்
யாரேனும் பார்க்க போகிறார்கள்
சென்றுவிடு என்றாள்.!




நான் பார்த்த அடே முகம்
ஆனால் அன்றோ நான் மாணவன்
இன்றோ நான்


"வேலையில்லா பட்டதாரி"

எழுதியவர் : கவிமோகன் (17-Jan-15, 5:15 pm)
சேர்த்தது : மோகன்கவி
Tanglish : ennaval yenna aval
பார்வை : 114

மேலே