அலுவலக அதிர்வுகள் - இராஜ்குமார்
அலுவலக அதிர்வுகள்
~~~~~~~~~~~~~
அலுவலக அட்டையின்
அடிப்பக்கம் அச்சிடப்பட்ட
அத்துனை விதிமுறையும்
விரும்பாத நாகரிகத்தின்
விளக்கமிலா விபரீதங்கள் ..
ஓயாமல் சுழலும்
வியாபாரச் சூழ்ச்சியில்
மூழ்கிய நிறுவனத்தின்
கண்ணீரைக் காசாக்கும்
அதிசய அலுவலகங்களின்
மேல்நோக்கு சிந்தனையில்
கீழ்நோக்கி சிதறுவது
பிணமான மனிதத்தின் பிம்பங்கள் ...
மூளையை முட்டி ...பின்
தட்டும் மின்னஞ்சலில்
ஒட்டிய வார்த்தைகள்
வெட்டிய நெஞ்சையையும்
வேடிக்கையாய் சிதைத்து
சுவரோடு உரசி சிரிக்கும் சுயநலங்கள் ....
- இராஜ்குமார்