மௌன புரட்சி

மௌனம்
என் மௌனம்
மௌன மொழி
மௌன பாஷை
மௌன வார்த்தை
மௌனகீதம்
மௌனராகம்
மௌன யுத்தம் என
சிலநாட்களாய்
அப்புறம் இப்புறம்
என திரும்பும் எப்புறமும் ,
மௌனம்,மௌனம்,மௌனமே ...
அடியே !
மௌனமான என்
மௌனமொழியாளே !
அறுபதாண்டு வரலாறு கொண்ட கழகத்திற்கே
கொள்கைரீதியாய் தம் கொள்கை பரப்பிட
ஒரே ஒரு கொள்கைபரப்புச்செயலாளர் தான்
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது ??
எட்டுத்திக்கும் உன் கொள்கை தனை
பல கொள்கைபரப்புச்செயலாளர் கொண்டு
மொட்டவிழும் மௌனத்தையும் மிஞ்சிடும்விதம்
மௌனமாய் ஓர் மௌன புரட்சி செய்திட ......