kaathal
இதழ் விரித்த மலரை - உன்
இதழ் விரித்துத் தீண்டினாயே!.
இதைக் கண்டதும் - எனது
இதயத்தையும் சீண்டினாயே!
மலருக்கு
முத்தம் கொடுத்த
மலரே! - என் இதய
மலரும் உனக்காகவே
மலரும். - கண்ணே! என்
விழி வலைக்குள் உன்
விழிமீனும், விரிந்த இதழும்
விழுந்ததால் -காதல்
விலாசத்தை என்னுள்
பதிவு செய்துள்ளது.
பூவிதழை - உன்
பூ இதழால் முத்தமிட்டதால்
பூவுக்கு(ள்) தேன் சுரந்ததோ! - அன்றி
பூவிதழுக்குத் தேனைத் தந்ததோ!
பூவுக்குள் பூ- கம்பம் (நட்டவளே!) தூவியவளே!
பூ வெடிக்காமல் பூத்தது இதனால் தானோ!
பூவே! உன்னால் நானும், எனை நினைந்தே நீயும்
பூத்துக் கொண்டேக் காதலிப்போம்.