அனாதை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

அனாதை
உயிர் கொடுத்த தகப்பனையும்
தன் எடையோடு என்னை சுமந்த
அன்னையும் அறியா நான் அனாதை
என்ற நாமத்திற்கு சொந்தக்காரன்.

குப்பை மேட்டில் எறியப்பட்டு
தெருவோரத்தில் படுத்துறங்கி
சாக்கடை நாற்றத்தை சுவாசித்து
பசிக்காக கையேந்தி
நான் வாழும் நாட்கள் ஓர்
தொடர் கதையே!

நல்லது, கெட்டது, பகிர
நாதியில்லை. அன்பு, பாசம்,நேசம்,
இரக்கம்,கருணை என்ற சொற்கள்
எனக்கில்லை.என் சொந்தக்காரன்
ஒருவனே! அவன் என் நிழல் தான்

என் அன்னை முகம் கானும்.அவள்
கரம் ஒருபிடி அன்னமும் ,தகப்பன்
மடியில் ஒரு நிமிடம் துயிலனும்.உடன்
பிறந்தோரின் பாச அலைகளில் நீராடி
ஒரு நாள் வாழனும். என் இலட்சியமும் ஆசையும்
இவையே!நிறைவேராது நடப்புலகில்
காத்திருக்கிறேன் மறுஜென்மம் வரை

என்னை ஈன்றவள் தூக்கி எறிந்தாளோ?
இறந்தாளோ? பிரிந்தாளோ? தெரியாது.
நான் மண்ணில் பிறந்தது தனியா,
விண்ணில் மறைவதும் தனிமையில்..

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (18-Jan-15, 12:49 am)
Tanglish : anaadhai
பார்வை : 90

மேலே