எங்க திருச்சிக்கு நீயும் வாரீயா
![](https://eluthu.com/images/loading.gif)
திருச்சிக்கு அழகு ராக்போர்ட்டு- எல்லாரும்
வந்துட்டு போக ஏர்போர்ட்டு !.
காவிரி பாலம் ஒரு சின்ன பீச்சு - அந்தக்
காவிரி ஆறே எங்க உயிர்மூச்சு !
பூலோக வைகுண்டம் திருவரங்கம் - இங்க
எல்லோரும் பார்க்க கலையரங்கம் !.
செயின்ட் ஜோசப்பு காலேஜு - அங்கிட்டு
மாரீஸ் ராக்கு காம்ப்ளச்சு !
இயற்கை அழகுக்கு இப்ராஹிம் பார்க்கு - எங்க
திருச்சியின் அழக நீயும் நோக்கு !
தெப்பக் குளத்த சுத்துது மனசு - அதத்
தாண்டி போனா சாரதாசு !
எங்க ஊரூ ஹோலிக்கிராஸ் , எஸ் .ஆர் .சி -அங்கிட்டு
திருச்சி துவாகுடி என் . ஐ . டி.!
பஞ்ச பிரகாரத்திற்கு ஓர் திருவானைக்கா - அதப்
பார்க்க நீயும் திருச்சிக்கு வா !
'பெல் ' லுன்னு சொன்னா சின்னபுள்ளைக்கும்- அது
தெரியும் கண்ணா !
புத்தூரின் பிஷப்ஹீபர் காலேஜு - எல்லோரும்
படிக்க இ .வி . ஆர் ., நேஷனலு .!
நைட்டு பகலா ஓடுது பார் ரயிலு - அது
எங்க ஊரு ஜங்சன் ஸ்டைலு .!
சோழரின் தலைநகரம் உறையூரு -அங்க
வணங்குவோம் வாங்க நாச்சியாரு !
சத்திரம் பக்கத்துல இந்திராகாந்தி காலேஜு - அங்கிட்டு
காவேரி பெயருல ஒரு காலேஜு !
ஹோட்டல் ரம்யாசும் மாயாசும் அழைக்குது - அதப்
பாத்தா உடனே நமக்கும் பசிக்குது !
சந்தோஷமா படிக்க ஜமாலு - இங்க
திருச்சி மக்களெல்லாம் நம்மாளு !
இத்தனையும் இருப்பதுவே எங்க ஏரியா ! - நீயும்
எங்க திருச்சிக்கு வாரீயா ..!!