+++ தலைநிமிர்ந்து வாழலாம் வா +++

"தலைநிமிர்ந்து வாழலாம் வா!.."

தூக்கம் மறந்துவிடு
பயணம் தொலைதூரம்!
துக்கம் துறந்துவிடு
வாழ்வு நிதம்மாறும்!

மயக்கம் விரட்டிவிடு
தெளிவாய் முடிவெடு!
மாயை துரத்திவிடு
நம்பிக்கை துணைநாடு!

உடலை உறுதிசெய்
மனதை வைரம்செய்!
உணர்வை சரிசெய்
வழியை தெரிவுசெய்!

உள்ளம் தூய்மையாக்கு
திட்டங்களை உறுதியாக்கு!
செயலை திடமாக்கு!
செய்வதை நன்மையாக்கு!

வாழ்க்கை வாழ்ந்திடு
எவருக்கும் நிகராக!
வாழ்வை வரலாறாக்கு
எவருக்கும் நிகரற்று!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (18-Jan-15, 8:52 am)
பார்வை : 398

மேலே