இன்னும் துறக்கவில்லை
அந்த பங்களாவின்
வாசலில் .
தினமும் வந்து மதில் ஓரத்தில்
தலையை நீட்டிக் கொண்டிருக்கும்
மரத்தின் நிழலில்
நிற்பதில் அலாதி சுகம்..
அந்த முதியவருக்கு..
அந்த மரத்தின் குயில்களுக்கும்..
அணில்களுக்கும்..
அவரை அடையாளம் தெரிந்ததால்..
வரவேற்பும்..அவரோடு விளையாட்டும்..
அவர் போடும் அரிசி, கடலைக்கும்..
மட்டும் இல்லாமல்..அன்போடு..
குயில்கள்..அவரை வரவேற்கும்..
அவருக்காக இசைபாடும்
அணில்கள் அவரோடு விளையாடும்..
மரமோ இதமாக காற்றை வீசிப் புன்னகைக்கும் ..
அந்த பங்களா வாசிகளுக்கு அவரைத் தெரியாது..
ஆனால் இவைகளுக்கு அவரைத் தெரியும் என்பதால்..!
பற்றுக்கொண்ட வாழ்க்கை அவரை
இந்த பங்களாவாசியாகத்தானே
வைத்திருந்தது..ஒரு காலத்தில்..அமைதியின்றி!
இப்போது காவியுடையில்
வலம் வருகிறார் உறவுகள் ஏதுமின்றி..
பற்றுகள் துணையுமின்றி..ஆனாலும் ..
அந்த மரமும் குயில்களும் அணில்களும்
அவரை மறக்கவில்லை..
அவரும் இன்னும்
அவற்றை துறக்கவில்லை!