ஒரு துளி சமுத்திரமாகவும்

சமுத்திரத்தில் வீசப்பட்ட
ஒரு துளிக்குள்
புத்தனும் இருக்கலாம்...
யுத்தனும் இருக்கலாம்...
எவர் வர வேண்டும்
என்பது
அவராகிய விருப்பம்...
அவர் வர வேண்டும்
என்பதில்
சமுத்திரம் ஒரு துளி...
உற்று நோக்கின்
வேகம் நிலை...
சற்று நில்,
யோக நிலை...
தேகம் கடக்க
ஒன்றுமில்லை
கடந்த பின்னும்
தேகம் இல்லை...
வந்த வழி சந்த நிலை
சொந்த நிலை
ஒன்றுமில்லை...
வீசு... வீசப் படு.....
ஆழ் கடல் முத்தென
கடந்து கிடக்கும்
கடைக் கோடிக்குள்
நீ மீண்டும்
ஒரு துளி...
சமுத்திரமாகவும்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (19-Jan-15, 2:30 pm)
பார்வை : 119

மேலே