இவர்கள் வேற மாதிரி

கருவறை முதல்
கல்லறை வரை
சில்லறைக்காக
சில்லரையாக அலையும்

இவ்வுலக வாழ்க்கையில்
இந்தக் காதலர்களுக்கு மட்டும்
பணத்தாள் கூட
கவிதை எழுதும்
வெற்றுக் காகிதம் ஆகிவிடுகிறது

எழுதியவர் : ஞானசித்தன் (19-Jan-15, 2:54 pm)
பார்வை : 89

மேலே