நின் செயல் எனக்கு

நின் செயல் எனக்கு...........


நீ செய்யும் தவறுகள்
கூட அழகாகிறது... உன்னை
சிறுபிள்ளையாய் நினைக்கையில்

நீ பேசாத தருணம்
கூட அழகாகிறது... உன்
பணி நிமித்தத்தால்

நீ தவறிட்ட எனழைப்புகள்
கூட அழகாகிறது...நின்
குடும்பத்தின் பொறுப்புகளினால்

உன் கேலியும் கிண்டலும்
கூட அழகாகிறது...என்
மனசுமைகளை குறைப்பதினால்

நீ விடாதுபேசும் அவசரநேரங்கள்
கூட அழகாகிறது...என்
பதற்றத்தை குறைப்பதால்

நீ செய்யும் அனைத்துமே
எனக்கு அழகைத்தான் தெரிகிறது ..

என்றுமே இதுவே தொடரவே
ஆசையும் கொள்கிறது என் மனது...

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (19-Jan-15, 2:46 pm)
Tanglish : nin seyal enakku
பார்வை : 502

மேலே