பாச நேச பக்தன்

வெற்றியின் களிப்பில் பிறந்த உயிர்க்கு
விருப்பமாய் வாழப் போராட்டம்!

வயிற்றுப் பசிக்காய் வாழ்வதற்கு
மனிதனாய் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!

வசதியின் போர்வையில் வசந்தங்கள் தேடும்
வாழ்க்கை என்பது வர்ணஜால பித்தலாட்டம்!

புத்தனாய் மாறாமல்
பண பித்தனாய் பிறழாமல்
பாச நேச பக்தனாய் வாழ்வதே மேல்!

எழுதியவர் : கானல் நீர் (19-Jan-15, 8:28 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : paasa nesa bakthan
பார்வை : 191

மேலே