வெற்றிடத்தின் விசும்பல்கள் 00000000000000000

வளர்ந்த கைகள்
தளர்ந்ததால்
நடை கம்பு
ஊன்றுகோலாய் 00000000

தோற்றம் குறைந்தது
தேற்றம் தர
தேடுகின்றோம்
மனிதர்களை !!!

வாழ்க்கை பயணம்
இறுதியில் !
வாழ்க்கையின்
அர்த்தத்தை உணர்த்தும்
மரணம் அருகில் !

உலகம்
முடிய போகும்
தருவாயிலும்
மரணம் தள்ளும்
மனிதர்களின்
பரிவான வார்த்தைகளால் !!!!

இன்று நிலை .....

பெற்றோம் !
பேணி காத்தோம் !
பறந்தார்கள் !
பிரிந்தார்கள் !

ஏக்கத்தை
தேக்குகின்றோம்
பெற்றெடுத்த
பிள்ளைகளின்
பரிவான
வார்த்தைகளுக்கு !

இளமையில்
ஆசிரியர்களால்
கல்வி !
முதுமையில்
பிள்ளைகளால்
கல்வி !

உணர்ச்சிகளை
பாசத்தின் வாயிலாய்
கற்று கொடுத்தோம் !

உணர்ச்சிகளை
அனுபவத்தின்
வாயிலாய்
சமாதி கட்டுகின்றோம் !

பிள்ளைகளின்
சுயநலம்
சுயரூபம் இட்டதால்
இந்த நிலை அல்ல

எதிர்பார்ப்பு
என்கின்ற
எங்கள் சுய நலத்தால் தான் !

வெற்றிடத்தின்
விசும்பல்களை
கொட்டி களைகின்றோம்
வெற்றிடத்தை
வேரோடு
அழிப்பதற்கு !

எங்கள்
விசும்பல்கள்
சாம்பல்
ஆவதற்கு முன் 00000000000
------------------------------------------------------------------
==கிருபா கணேஷ் ====

எழுதியவர் : கிருபகணேஷ் (21-Jan-15, 11:49 pm)
பார்வை : 81

மேலே