கடல் தாயின் புதல்வர்கள்

நம்பிய உறவுகள் கரையில் இருக்க
நம்பிக்கையோடு மீன் பிடிக்க
கடலுக்குள் சென்று
கண்ணீரை வாங்கி வருகிறோம்!

தினம்! தினம!
இந்நிலை தொடரவே!
எங்கள் கண்ணிரில் கல்லும் கரைந்து போகும்!

நெய்தல் நிலம்
எங்கள் பூமியடா! இதில்
எல்லை தாண்டி போனதாகச் சொல்லி
துப்பாக்கி தோட்டாக்கள்
எங்களை பலி கேட்குதடா!

கரைகள் உறங்கினாலும்
அலைகள் உறங்காத கடலில்
எல்லைகளும் தெரிவதில்லை!

நாங்கள் தந்த ஆதாயத்தில் மகிழ்ந்தவர்களுக்கு
எங்களின் கண்ணீரின் வலியும் புரிவதில்லை!

மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட
இந்த மீனவனின் உயிருக்கு இருப்பதில்லை!

துயர் பல கண்டாலும் அரவணைக்கும்
கடல் அன்னையை நம்பியே
எங்கள் வாழ்க்கை தொடர்கிறது!

-வே. பூபதிராஜ்

எழுதியவர் : வே. பூபதிராஜ் (23-Jan-15, 10:34 am)
பார்வை : 88

மேலே