சிந்தும் புன்னகை ஓர் சிந்தியல் வெண்பா

கவி உளியெடுத்து
உலகைச் செதுக்கும்
சிற்பியு மிவரோ....

மொழித் தூரிகையில்
சமத்துவம் தீட்டும்
ஓவியர் தானோ....

இள நெஞ்சங்களில்
நன்னெறி விதைக்கும்
விவசாயோ....

தரணியாளும்
தமிழ ரசியின்
தலையாயக் காவலரோ...

துள்ளல் ஓசை கொண்ட
கலிப்பாவோ - இவர்
சொல்லிடும் கருத்துகள்
தெவிட்டாத் தீம்பாவோ....

சிந்தும் புன்னகை - அது
சிந்தியல் வெண்பாவோ - தமிழ்
சங்கம் போற்றிடும் நல்ல
சந்தக்கவி நீர்தானோ....

விருட்சமென் றானப்பின்னும்
விதைதான் நானென் கிறீர்
வியந்தே பாராட்டினால்
பணிந்தே பதில் சொல்லுவீர்....

நூலெழுதும் நூலகமே - உம்புகழ்
நூற்றாண்டு கடந்து வாழும்
நானெழுத முடியுமோ உம்மை
வார்த்தையின்றி முடிக்கின்றேன்
இது உண்மை.....

எழுதியவர் : யாழ்மொழி (23-Jan-15, 5:39 pm)
பார்வை : 594

மேலே