வழியெல்லாம் நண்பர்கள்

தோள் மீது கை போட்டுக் கொண்டே
எங்கும் உடன் வரும்
நண்பன் ஒருவன் ..பள்ளிப் பருவத்தில்..!

பதின் வயதில் வந்த
முதிர்ச்சியில்லா இனக்கவர்ச்சியை
அசை போட துணையாய் ஒரு நண்பன்..!

வாழ்க்கையின் வாசற்படியில்
நிஜங்களின் சூடு பட்ட நேரங்களில்
ஆற்றி மருந்திட ஒரு நண்பன்..

வெற்றிகளைக் கொண்டாடவும்
சோர்ந்திடும் நேரங்களிலும்
சாய்வதற்கு தோளாக ஒரு நண்பன்..!

முதுமையில் பழையன பற்றி
பேசவும்..நினைவுகள் கூட்டவும்
இசைந்து போகும் ஒரு நண்பன்!

வாழ்வின் எல்லா நேரங்களிலும்
எவனாவது ஒருவன் உற்ற நண்பன்..
எல்லாம் முடிந்து மீளா உறக்கத்தில்
ஆழ்ந்தபின் வந்து வழியனுப்ப
நினைவுகளையும் நண்பனையும் சுமந்து
அத்தனை பேரும்...ஓரிடத்தில்!
எப்போதும் போல் .. உண்மை நண்பர்கள் ..
எதிர்பார்ப்புகள் இல்லாமல் !

எழுதியவர் : கருணா (23-Jan-15, 11:41 am)
பார்வை : 197

மேலே