நிறைவேறாத ஆசை

தேர் ஓடுது தெவோரம்
சேர்ந்தே ஓடுது
திருவிழாக் கூட்டம்.......

கார் ஓடுது தார் ரோட்டிலே
பின்னாடி துரத்தி ஓடுது
கரும் புகை மூட்டம்.........

நீர் ஓடுது ஓடையிலே
அதனுடன் சேர்ந்தே
ஓடுது துள்ளும் மீன்கள்
கூட்டம்..............

நண்டு ஓடுது பொந்தை நாடி
பின்னாடியே பதுங்கி
ஓடுது நரிகள்கூட்டம்..........

காற்று ஓடுது தடையைப் பாராமல்
இடையில் மோதியே
ஆடுது மரங்களின்
தோட்டம்............

கல்லுரி வாசலில்
பெண்கள் நடமாட்டம்
அதை நோட்டமிட்டே
சுத்துகின்றன
இளைஞர்கள்
கூட்டம்.................

அவளின் வண்டுக் கண்
அவனைப் பார்த்ததுமே
அவன் உள்ளம் போட்டது
கொண்டாட்டம்................

அவள் விட்டு விலகி
நின்றதுமே மனம்
காட்டியது வாட்டம்........

சித்திரச் சோலையிலே
அவளின் மதி முகம்
பார்த்ததுமே மனம்
காட்டியது ஒரு தடு
மாற்றம்.............

அதை வெளியில்
காட்டாமலே துள்ளிக்
குதித்தான்
முயலாட்டம்..........

அவள் விரல் சித்திரம் தீட்ட
உள் நெஞ்சில் பாராட்டு
பாடினான்
அருவியாட்டம்............

காட்டிக் கொள்ளவும்
முடியவில்லை
கடந்து செல்லவும்
முடியவில்லை
ஆசையாமல்
நின்று விட்டான்
அடிச்சு ஏற்றிய
ஆணியாட்டம்.......

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (24-Jan-15, 6:47 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 299

மேலே