தேடும் பொருள் நானாக

உன் பனி தோட்டத்தில் சிறு
பூக்களும் நானாவேன்..

மலர்ந்திடும் நேரத்தில் ஒரு
தேவதைபோல் வருவேன் ..

புல் வெளியில் நீ நடந்தால் பனி
துளியும் நானாவேன்..

பூவினிடம் நீ வந்தால் உன்னை
வாசமாய் வரவேற்ப்பேன்..

கண் அருகில் நீ இருந்தால் என்
கவலைகளை மறந்திருப்பேன்..

தேடியவன் நீ என்றால் நீ
தேடும் பொருள் நானன்றோ....

எழுதியவர் : Sathya (25-Jan-15, 2:27 pm)
சேர்த்தது : Sathya Sakthi1
பார்வை : 63

மேலே