சிக்கிக்கிட்டேன்

ஆகாய வர்ண கடலே
இது எனது காதல் மடலே
முளரிப்பூ கொண்டத் திடலே
நீரில் விழுந்தால் முளைக்குது செதிலே

வலிகளின் வகையினில் எதிலும்
தினம் தினம் மாட்டச் சொல்லும்
விழிதேனே பகலும் அல்லும்
உன் நினைவு வந்து என்னை கொல்லு(ள்ளு)ம்

உருப்படியாய் இருந்ததில்லை
இன்று உருக்குலைத்துப் போன நிலை
தென்றல் தீண்டி ஆடும் இலை
உன்னைக் கண்டால் பூக்குது தலை

மனதை மயக்கும் குரலில்
உனது மூன்று வார்த்தைச் சொல்லில்
நடனம் ஆடுகிறேன் நெல்லில்
சிக்கிகிட்டேன் நானும் இந்த காதல் எனும் வில்லில்

-கீதங்களின் வானவிநோதன்~

எழுதியவர் : கீதங்களின் வானவிநோதன் (25-Jan-15, 7:49 pm)
பார்வை : 222

மேலே